தமிழகம் முழுதும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மலிவு விலை துவரம் பருப்பு விற்பனை செய்யும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஆன்லைன் வர்த்தகம், பெரு நிறுவனங்களின் பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்த துவரம்பருப்பு இரு மடங்காக அதிகரித்து கிலோ ரூ.210 முதல் ரூ.230 வரை உயர்ந்தது. இதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்ததனர்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து 5 ஆயிரம் டன் துவரம் பருப்பை அண்மையில் இறக்குமதி செய்தது. அதில், தமிழகத்துக்கு 500 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரப்பெற்ற துவரம் பருப்பை அரவை ஆலைகள் மூலம் உடைத்து சுத்தம் செய்து பாக்கெட்டுகளில் அடைத்து, 500 கிராம் ரூ.55-க்கும் 1 கிலோ ரூ.110 என்ற விலையில் கூட்டுறவு பண்டக சாலை, பல்பொருள் விற்பனை அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என முதல்வர் அறிவி்த்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் மலிவு விலை துவரம் பருப்பு விற்பனை தொடங்கியது, முதல் நாளில் மட்டும் 15 டன் பருப்பை பொதுமக்கள் வாங்கிச்சென்றுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களுக்கு மலிவு விலை துவரம் பருப்பு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்து நகர கூட்டுறவு பண்டகசாலை அலுவலர்களிடம் விசாரித்தபோது, புதுக்கோட்டை மாவட்டத்துக்கான துவரம் பருப்பு ஒதுக்கீடு இதுவரை செய்யப்பட்டவில்லை. அது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தீபாவளிக்குள் கிடைக்குமா என்பது குறித்து உறுதியாகக்கூறமுடியாதெனவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
லெனின் பாண்டியன் டிரைலர்!

தமிழக நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

