யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சீனப்பட்டாசுகள் விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும்

பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நலன் கருதி சீனப்பட்டாசுகள் விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறினார்.

News image
Updated On :4 நவம்பர் 2015, 2:13 pm

கோ.ஜெயக்குமார்

பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நலன் கருதி சீனப்பட்டாசுகள் விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறினார்.

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 10ம் ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபாவளி பண்டிக்கை நெருங்குவதையொட்டி லாபம் அதிமாக கிடைக்கிறது என்பதற்காக வியாபாரிகள் சீனப் பட்டாசுகளை விற்க வேண்டாம். பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு பட்டாசு உள்பத்தியாளர்கள் நலன் கருதி சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். பொதுமக்களும் சீனப் பட்டாசுகளை வாங்க வேண்டாம். சீனப் பட்டாசுகளை இந்தியாவில் நுழைவிட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நூடுல்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட அன்னிய தயாரிப்புகள் அனைத்தும் தரமற்றவையாகத்தான் இருக்கும்.

அன்னியப்பொருள்களை சந்தைப் படுத்தினால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு சில்லரை வணிகமும், பொருளாதாரமும் பாதிக்கப்படும். உள்நாட்டு சில்லரை வணிகத்தை அழிக்க  ஆட்சியாளர்கள் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றனர். அதனால்தான் வணிகர்கள்மீது புதுப்புது வரிகளை சுமத்துகிறார்கள். ஏற்கனவே உள்ள வரி விதிப்புகளால் வணிகர்கள் திணறி வருகிறார்கள். மேலும் புதிய வரிகளை சுமத்துவதால் வணிகர்கள் பலர் தொழிலை விட்டே விரட்டும் சூழச்சிதான் இதெல்லாம்.

சுனாமி போல் ஆன்-லைன் வர்த்தகத்தை அரசு அனுமதித்துவிட்டது. இதை அனுமதித்தால் கடைகள் இருக்குமா, இது பொருளாதார சுழற்சிக்கு வழிவகுக்குமா. வெளிநாட்டில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே லாபம் அடைவார்கள். சந்தையை கைப்பற்றி பொருளை அதிக விலைக்கு விற்று கொள்ளையடிப்பார்கள். தரமில்லாத பொருள்களை தலையில் கட்டுவார்கள் என்பதையும் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆட்சியாளர்கள் இதை தடுக்க மாட்டார்கள். காரணம் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் நம்நாடும் கையெழுத்திட்டுள்ளது. இதனால் உள்நாட்டு வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலக வேண்டும். மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி கடைகள் நடத்துவதில் அரசு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.