சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரத்தில் வெள்ள பாதிப்புகள்: அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் ஆய்வு

சிதம்பரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

Updated On :13 நவம்பர் 2015, 11:02 am

சிதம்பரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் உடன் சென்றார்.

சிதம்பரம் நகரில் கடந்த நவ.9-ம் தேதி பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கெடுத்து பெருத்த சேதம் ஏற்பட்டது. மரங்கள், மின்கம்பங்கள் அனைத்து பகுதிகளில் விழுந்தது. இதனால் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை அன்று பல பகுதிகளில் நீர் வடிந்தது. இன்னும் பல பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் சிதம்பரம் நகரில் முகாமிட்டு வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.