அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மணிமுத்தாறு அருவியில் மீண்டும் வெள்ளம்: 130 அடியை தாண்டியது அடவிநயினார் அணை!

மணிமுத்தாறு அணைப் பகுதியில் அதிகபட்சம் 86.4 மி.மீ மழை பெய்ததை அடுத்து அருவியில் சனிக்கிழமை மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது.

News image
Updated On :21 நவம்பர் 2015, 7:41 am

ஷேக் அப்துல்காதர்

மணிமுத்தாறு அணைப் பகுதியில் அதிகபட்சம் 86.4 மி.மீ மழை பெய்ததை அடுத்து அருவியில் சனிக்கிழமை மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகள் நிரம்பி வருகின்றன. சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: மணிமுத்தாறு அணையில் அதிகபட்சம் 86.4 மி.மீ, நான்குனேரியில் 67 மி.மீ, தென்காசியில் 55.6 மி.மீ,
அம்பாசமுத்திரம் 48.8 மி.மீ, சேரன்மகாதேவி 46.2 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு 43 மி.மீ, ராதாபுரம் 35 மி.மீ, ஆலங்குளம் 25.2 மி.மீ, ஆய்க்குடி 20.2 மி.மீ, பாளையங்கோட்டை 20 மி.மீ, திருநெல்வேலி 12 மி.மீ, களக்காடு 15.8 மி.மீ, மூலக்கரைப்பட்டி 22.3 மி.மீ, செங்கோட்டை 14.2 மி.மீ.

மணிமுத்தாறு அணைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 அணைகள் நிரம்பியுள்ள நிலையில் 52.50 கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 21 கனஅடி நீர்வரத்து இருந்தது.

132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது. அணைக்கு விநாடிக்கு 52 கனஅடி நீர்வரத்து இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படும் அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாபநாசம் அணை நீர்மட்டம் 107.50 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 121.03 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.15 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 82 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.08 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, வடக்குப்பச்சையாறு அணை நீர்மட்டம் 35.75 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 3 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 676.39 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 403 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 54 கனஅடி, ராமநதி அணைக்கு விநாடிக்கு 60 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. நம்பியாறு அணைக்கு வந்து கொண்டிருந்த 510 கனஅடியும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.