அணைகளுக்கு 15,000 கனஅடி நீர்வரத்து: பாபநாசம், சேர்வலாறு நீர்மட்டம் கணிசமாக உயர்வு
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகளுக்கு 15,000 கனஅடி நீர்வரத்து இருந்தது.


நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகளுக்கு 15,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. ஒரே நாளில் பாபநாசம் அண 8 அடியும், சேர்வலாறு அணை 11 அடியும் உயர்ந்துள்ளது. அணைகளிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் 3 தினங்களாக பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணையில் அதிகபட்சம்-177, பாபநாசம் கீழ் அணை-76, சேர்வலாறு அணை-66, மணிமுத்தாறு அணை-55.2, கடனாநதி அணை-20, ராமநதி அணை-33, கருப்பாநதி அணை-35, குண்டாறு அணை-5.2, அடவிநயினார் அணை-15, நம்பியாறு அணை-5, கொடுமுடியாறு அணை-5,
பாளையங்கோட்டை-5, திருநெல்வேலி-2, அம்பாசமுத்திரம்-8.4, சேரன்மகாதேவி-4, கன்னடியன் அணைக்கட்டு-25, சங்கரன்கோவில்-22, தென்காசி-27.2, செங்கோட்டை-4.3, ஆய்க்குடி-40.8, ஆலங்குளம்-31.4, ராதாபுரம்-14, நான்குனேரி-6, களக்காடு-8.4.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 7925 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு 3,000 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 2064 கனஅடியும், கடனாநதி அணைக்கு 1399.62 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 477.72 கனஅடியும் மொத்தம் 14,866 கனஅடி நீர்வரத்து இருந்தது.
நீர்வரத்து கணிசமாக இருந்ததால் ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 11 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2.40 அடியும் உயர்ந்துள்ளது. கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில் இவ்விரு அணைகளில் இருந்து உபரிநீர் 2000 கனஅடி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணை நீர்மட்டம் 121.30 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 143.63 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 83.50 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 82, கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.86 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 132.22 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 38.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 47 அடியாகவும் இருந்தது.
2 ஆவது நாளாக வெள்ளம்: பாபநாசம் கீழ் அணை, கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதாலும், மழை பெய்து வருவதாலும் தாமிரவருணி ஆற்றில் சுமார் 8 ஆயிரம் கனஅடி செல்கிறது. இதனால் 2 ஆவது நாளாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு்ள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் 19,728 கனஅடி உபரி நீர் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிர கண்காணிப்பு: மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளம் இருப்பதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிராதன அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்வரத்து கணிசமாக இருப்பதால் அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...