நடிகர் வடிவேலு மீதான வழக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடிகர் வடிவேலு மீதான வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நடிகர் வடிவேலு மீதான வழக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடிகர் வடிவேலு மீதான வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் போது, விஷால் அணிக்கு ஆதரவாக மதுரையில் பேட்டி அளித்த வடிவேலு, நடிகர் சங்கத்தை காணவில்லை என கூறினார். இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் ராஜா நாமக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் நடிகர் வடிவேலு 20 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். எனினும், அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கை எதிர்த்து வடிவேலு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், நடிகர் சங்கத்தை காணவில்லை என நகைச்சுவையாகவே குறிப்பிட்டேன். மேலும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பையா, வடிவேலு மீதான நாமக்கல் நீதிமன்ற வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு தடை விதித்தார். மேலும், அந்த வழக்கில் வடிவேலு நேரில் ஆஜராகுவதிலிருந்தும் விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com