மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை, அன்னவாசல் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார மூர்த்தி சுவாமிகள் குருபூஜை விழா: அமைச்சர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஸ்ரீ சத்ரு ஸம்ஹார மூர்த்தி சுவாமிகளின் 77-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி, விஜயபாஸ்கர்

News image
Updated On :1 அக்டோபர் 2015, 1:46 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஸ்ரீ சத்ரு ஸம்ஹார மூர்த்தி சுவாமிகளின் 77-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி, விஜயபாஸ்கர் அன்னதான விழாவை தொடங்கி வைத்து ஆதரவற்றோர்களுக்கு இலவச வேட்டி வழங்கினார்.

முன்னதாக இதையொட்டி, புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நவக்கிரக லட்சார்சனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை காலை நடைபெற்ற குருபூஜை விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நன்பகல் 12 மணியளவில் மஹாதீபராதனை காட்டப்பட்டு. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இரவு 9 மணியளவில் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார மூர்த்தி சுவாமிகளின் திருவுருவப் படம் மேளதாளங்கள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து ஆசிரமம் வந்தடைந்தது.

அதேபோல், அன்னவாசல் அருகேயுள்ள வாதிரிப்பட்டியில் உள்ள ஆலயத்திலும் விஷேச பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகி ஏ, கே. சுந்தரம் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.