விருதுநகர் மாவட்ட கூட்டுறவு விற்பனை இணைய உரக் கிடங்கில் இருப்பு குறித்து ஆட்சியர் சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டுறவு விற்பனை இணையத்தில் உரங்களின் இருப்பு வகைகள் குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் ஆய்வு செய்தார். அப்போது, கிரிப்கோ நிறுவனத்தின் யூரியா 100 மெ.டன், இப்கோ நிறுவன யூரியா 140 மெ.டன், ஐபிஎல் நிறுவன டி.ஏ.பி 184 மெ.டன், கோரமண்டல் நிறுவன சூப்பர் பாஸ்பேட் 42 மெ.டன் ஆகியவை இருப்பு இருந்ததை ஆய்வு செய்தார்.
மேலும், உடனடியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவைப்பட்டியல் பெற்று பிரித்து அனுப்பி வைக்குமாறு கூட்டுறவு விற்பனை இணைய மேலாளருக்கு உத்தரவிட்டார்.
அதேபோல், ராபி பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களை வேளாண்மை துறை மூலம் விவரங்கள் பெற்று அவற்றை இருப்பு வைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.கனகராஜன், தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் விவேகானந்தன் மற்றும் டான்பெட் மண்டல மேலாளர்(பொறுப்பு) சண்முகபிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


