ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்னை: இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்ப பிரச்னை காரணமாக தாய் இரு குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :4 அக்டோபர் 2015, 4:15 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்ப பிரச்னை காரணமாக தாய் இரு குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்தவர் பேச்சிராசு (33). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி (25). இவர்களுக்கு இருளப்பபிரசாத் (4) என்ற மகனும் ஹர்சிதா ஸ்ரீ என்ற 6 மாதத்தில் குழந்தையும் உண்டு. 2010-ம் ஆண்டு திருமணம் முடித்துக் கொண்ட இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ராமலட்சுமி தனது இரு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் சடலங்களையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகாசி கோட்டாட்சியர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.