ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (35). இவர் பிஸ்கெட் டீலராக உள்ளார். இவரது மனைவியை சேத்தூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, சனிக்கிழமை கணேஷ்குமார் திருச்செந்தூர் சென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மேல் மாடியில் குடியிருப்போர் கீழ் தளத்தில் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து.
வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கணேஷ்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...