விருதுநகர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்ததாக திங்கள்கிழமை 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ளது ஒண்டிப்புலி கிராமம். இங்கு குடியிருப்பு பகுதிகளில் அனுமதியில்லாமல் பட்டாசுகள் உற்பத்தி பயன்படுத்தும் கருந்திரிகளை தயாரித்து வருவதாக ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்ததாம். அதன் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீஸார் காலையில் அப்பகுதியில் திடீர் ரெய்டு செய்தனர்.
அப்போது, ஒண்டிப்புலியைச் சேர்ந்த சங்கரபாண்டி(43), மாரிக்கனி மற்றும் சோமசுந்தரம் வீடுகளில் கருந்திரிகளை தயார் செய்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இரு்நது 30 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர். இது தொடர்பாக 3 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

