கலசலிங்கம் பல்கலை.யில் வளாக நேர்காணல்: 83 பேருக்கு பணி நியமன உத்தரவு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று இரு நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் 83 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று இரு நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் 83 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
சென்னை, விப்ரோ மனிதவள மேம்பாட்டுத் துறையின் மேலாளர்கள் வெங்கட், வீரப்பா, விஸ்வநாதன், சுதர்ஸன் ஆகியோர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியர் 265 பேருக்கு எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் நடத்தினர். இவர்களின் 74 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இவர்கள் படிப்பு முடிந்தவுடன் பணியில் சேர வேண்டும்.
பெங்களூரு, பலாடியன் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தேர்வாளர்கள் ஸ்ரீகிருஷ்ணா, பூஜனா, தீர்ராஜா, சித்தார்த், ராஜூவ் குமார் ஆகியோர் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு வளாக நேர்காணல் நடத்தினர். இவர்களில் 9 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்திலே வேலைவாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதின் செய்திருந்தார்.
பணி நியமன உத்தரவு பெற்ற மாணவ மாணவியரை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், இயக்குநர் எஸ்.சசிஆனந்த், பதிவாளர் வெ.வாசுதேவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...