விருதுநகரில் சாதி ஆணவக்கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இன்று நடைபயணம் மேற்கொண்டனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சார்பில் சாதி ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அரசு பணி வழங்குதல், தம்பதியினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் காந்திபுரம் வி.வி.ஆர்.சிலை முன்பு நடந்த நடைபயண நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழி்ப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஜி.முருகேசன் தலைமை வகித்தார். மதுரை தெற்கு சட்ப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாத்துரை கலந்து கொண்டு நடைபயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நடைபயணம் வி.வி.ஆர்.சிலை முன்பு தொடங்கி, தொடர்ந்து ரயில்வே பீடர் சாலை, ராமமூர்த்தி சாலை, அரசு மருத்துவமனை வழியாக பாண்டியன் நகரில் உள்ள ரோசல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முடிந்த நடைபயணத்தை சி.ஐ.டி.யு மாநில துணைப்பொதுச்செயலாளர் கருமலையான் நிறைவு செய்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

