ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆர்.எம்.எஸ்.ஏ. சார்பில் கலசலிங்கம் பல்கலையில் கலா உத்சவ் கலை விழா

தமிழக பள்ளிக் கல்வித் துறை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.) ஆகியவை இணைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கான கலா உத்சவ் என்ற கலை விழாவை கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று நடத்தின.

News image
Updated On :11 அக்டோபர் 2015, 9:54 am

கோ.ஜெயக்குமார்

தமிழக பள்ளிக் கல்வித் துறை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.) ஆகியவை இணைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கான கலா உத்சவ் என்ற கலை விழாவை கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று நடத்தின.

விழாவிற்கு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மைக் கல்வி அலுவலருமான அ.புகழேந்தி தலைமை தாங்கினார். பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் முன்னிலை வகித்தனர். மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.முனியசாமி வரவேற்றார். துணை வேந்தர் ச.சரவணசங்கர், மாணவர் சேர்க்கைப் பிரிவு டீன் எஸ்.என்.ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர்.எம்.எஸ்.ஏ. உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜா, தலைமை ஆசிரியர்கள் கே.சுந்தரராஜன், எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.

இதில் நடனக் கலைப் போட்டியில் ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இசைக் கலைப் போட்டியில் மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் உயர்நிலைப் பள்ளி, காண்கலைகள் போட்டியில் ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாடகக் கலைப் போட்டியில் சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜர் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி.ஆர். ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவை வெற்றி பெற்றன.

இப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து வருவாய் மாவட்டம் அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வராஜ்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.