ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநில ஜூடோ போட்டி: கலசலிங்கம் மாணவ மாணவியர் 2-ம் இடம்

தமிழ்நாடு மாநில 25-வது ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவ மாணவியர் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பெற்றனர்.

News image
Updated On :11 அக்டோபர் 2015, 1:18 pm

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு மாநில 25-வது ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவ மாணவியர் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பெற்றனர்.

போட்டிகள் திண்டுக்கல் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

இதில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சிவில் மாணவி தேவிஸ்ரீ ஜூனியர் பிரிவில் 78 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இயந்திரவியல் முதலாண்டு மாணவர் நவின்ராஜ் 90 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றார்.

வாலிபால்: மம்சாபுரத்தில் மின்ணெளியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக அணி 3-ம் இடம் பெற்று வெண்கல கோப்பையையும் ரூ.6 ஆயிரம் ரொக்கப் பரிசையும் வென்றது.

வெற்றி பெற்ற மாணவ மாணவியரையும் இவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர்கள் ஜி.டி.செல்வகணேஷ், விஜயலட்சுமி ஆகியோரையும் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.