ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விவசாயத்திற்கு பயன்தரும் தானியங்கி இயந்திரம்: கலசலிங்கம் மாணவர்கள் வடிவமைப்பு

பயிர்கள் நீரின்றி வாடினால் உடனே தெரிவித்து தானே மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சும் புதிய இயந்திரத்தை விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2015, 1:56 pm

கோ.ஜெயக்குமார்

பயிர்கள் நீரின்றி வாடினால் உடனே தெரிவித்து தானே மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சும் புதிய இயந்திரத்தை விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பி.டெக்., இ.சி.இ. படிக்கும் பி.கார்த்திக்குமார், அவ்தேஷ்குமார், டி.ரவி ஆகியோர் துறைத் தலைவர் பள்ளிகொண்ட ராஜசேகர் ஆலோசனையின் பேரில் பயிர்கள் நீரின்றி வாடி நிலம் வறண்டால் சென்ஸார் மூலம் தெரிவித்து மோட்டாரை இயக்கி நீர்பாய்ச்சும் புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த இயந்திரத்தில் மைக்ரோ கன்டோரலர் பிரிவு, பலவகையான சென்ஸார் மற்றும் ஜிக்பீ மாடல் பிரிவு, குறியீட்டு எண் பிரிவு என்று மூன்று பிரிவுகள் உள்ளன. காற்று, நீர், நிலம், கரியமிலவாயு, காற்று வேகம் இவற்றை அறியும் பல வகை உணரும் கருவிகள் (சென்ஸார்) உள்ளன.

இந்த சென்ஸார்கள் வயலின் நான்கு மூலைகளிலும் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றிலிருந்து நிலம், நீர், காற்று என உணர்ந்து நீர் தேவைக்கேற்ப கட்டளையை மைக்ரோ கண்டரோலர் பிரிவுக்கு அனுப்பும். அங்கிருந்து தானாக இயங்கும் கருவி மோட்டாரை இயக்கி நீர் பாசனம் செய்கிறது.

அதோடு இல்லாமல் இந்த சென்ஸார் சில சமயம் ஏதாவது விலங்குகள் பயிர்களுக்கிடையே வந்தால், உடனே மைக்ரோ கண்ட்ரோலருடன் இணைந்திருக்கும் பொத்தானை அழுத்தி சப்தத்தை எழுப்பி விலங்கை வெளியே விரட்டி விடுகிறது.

இதனை மாணவர்கள் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் முன்னிலையில் இயக்கி காண்பித்தனர். இக் கருவியை செய்து முடிக்க ரூ.8 ஆயிரம் செலவானதாயும், காப்புரிமை பெறுவதற்காக சென்னையில் உள்ள அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளதாயும் மாணவர்கள் கூறினர். வயலுககும் மோட்டாருக்கும் உள்ள தூரம் 2 கி.மீ. க்குள் இருக்கும் போது இந்த இயந்திரம் இயங்கும் என்றும், மேலும் தூரத்திலிருந்து இயக்கவும் மேலும் பல பயனுள்ள வகையில் இந்த கருவியை மாற்றியமைக்கவும் நிதி அதிகம் தேவை என்றனர்.

நாட்டிற்கு பயனுள்ள ஒரு புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ள மாணவர்களை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.