ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2015, 3:12 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி கடைசி தெருவைச் சேர்ந்தவர் ராஜையா மகள் தங்கம் (25). இவர் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். இதே இடத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முருகன் (26). இவர் சிவகாசியில் கட்டிங் மிஷினில் வேலை செய்து வருகிறார்.

தங்கம் வீட்டில் தனியே இருந்த நேரத்தில் 16.1.15-ம் தேதி முருகன் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். தங்கத்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். இதனையடுத்து பெற்றோர் மற்றும் ஊர் நாட்டாமை உள்ளிட்டோர் முருகன் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார்கள். ஆனால் முருகன் தரப்பினர் திருமணத்திற்கு மறுத்து விட்டார். இதனையடுத்து நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்கம் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.