ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விபத்தில் காயமுற்ற இளைஞருக்கு ரூ.2.67 இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் கொடுங்காயம் அடைந்த இளைஞருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.2.67 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :13 அக்டோபர் 2015, 2:39 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் கொடுங்காயம் அடைந்த இளைஞருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.2.67 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் கிழக்கு பக்கம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் சந்திரமோகன் (24). இவர் மதுரை சாலையில் உள்ள டிராக்டர் பழுது பார்க்கும் இடத்தில் பிட்டராக வேலை செய்து வந்தார்.

29.11.2013-ம் தேதி மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பெருமாள்பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பர் ஓட்டி வந்த டிராக்டர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கொடுங்காயம் அடைந்த சந்திரமோகன் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

இதனையடுத்து தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.வசந்தி, கம்பம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி, சந்திரமோகனுக்கு ரூ.2.67 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.