ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு: கடலோர காவல் பாதுகாப்பு படை நடவடிக்கை

கடலூரில் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர காவல் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

News image
Updated On :13 அக்டோபர் 2015, 2:33 pm

முத்துகுமார்

கடலூரில் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர காவல் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

கடலூர் முதுநகர் அருகேயுள்ள சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் முருகைய்யன் மகன்கள் கவிராஜா(26), கவி(24), சிவசாமி மகன் தர்மலிங்கம் (21), சூரியகாந்தன் மகன் வெங்கடேஷ்(29), முனியப்பன் மகன் வேந்தன்(27). அனைவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீன்பிடிப்பதற்காக ஒரே பைபர் படகில் கடலூர் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றனர்.

படகு சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்ற போது திடீரென பழுதானது. இதனால், படகிலிருந்த 5 மீனவர்களும் தத்தளித்தனர். அப்போது மீனவர்களுக்கான இலவச தொலைதொடர்பு வசதிக்காக வழங்கப்பட்டுள்ள எண்.1093ஐ அவர்கள் உதவிக்கு அழைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்திலிருந்து கடலோர காவல் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வி.சிவகுருநாதன் தலைமையிலான குழுவினர் மற்றொரு படகில் கடலுக்குள் சென்றனர். அங்கு தத்தளித்த 5 மீனவர்களை மீட்டதோடு, படகையும் இழுத்து வந்து கரை சேர்த்தனர். விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு படையினருக்கு மீனவ அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.