மாநில நிகர்நிலை பல்கலை.களுக்கிடையிலான கூடைப்பந்துப் போட்டி: எஸ்.ஆர்.எம்., இந்துஸ்தான் அணிகள் முதலிடம்
தமிழ்நாடு மாநில நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையே விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும், பெண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்றன.










