ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், உடைகுளம் கண்மாய் கருவைத் தோப்புப் பகுதியில் கிருஷ்ணசாமி (67) என்பவருக்குச் சொந்தமான காடு உள்ளது. இவர் காட்டில் திங்கள்கிழமை அதிகாலை படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நாய்களும், மாடுகளும் அலறியுள்ளன. இவர் டார்ச் லைட் உதவியுடன் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்பகுதியில் உள்ள சீமைப் புல்லுக்கு இடையே சிறுத்தைப்புலி இருந்து, உறுமும் சத்தம் கேட்டுள்ளது. தனியாள் என்பதால் கம்பை அதன் மீது எறிந்துவிட்டு வந்துவிட்டாராம். மறுநாள் அப் பகுதியில் அழகு என்பவர் சிறுத்தை நடமாட்டத்தைப் பார்த்துள்ளார். புதன்கிழமை மாரியப்பன் என்பவர் சிறுத்தையின் நடமாட்டத்தைப் பார்த்துள்ளார். இது குறித்து அப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட வன உயிரினக் காப்பாளர் அசோக்குமாரிடம் கேட்டபோது, சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிப்பதற்கு வனச்சரகர் பால்பாண்டி தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளோம் என்றார்.
சிறுத்தையை உடனே பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...