மோட்டார் சைக்கிள்கள் மீது வாகனம் மோதல் 3 பேர் சாவு: இருவர் அடையாளம் தெரியவில்லை
கடலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மீது வாகனம் மோதியதில் 3 பேர் இறந்தனர். இதில், 2 பேரின் அடையாளம் தெரியவில்லை.


கடலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மீது வாகனம் மோதியதில் 3 பேர் இறந்தனர். இதில், 2 பேரின் அடையாளம் தெரியவில்லை.
கடலூர் சிதம்பரம் சாலையில் காரைக்காடு அருகே சனிக்கிழமை மதியம் இரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நிலையில் சிதறிக் கிடந்ததையும் சாலையின் ஓரத்தில் 3 பேர் படுகாயங்களுடன் கிடந்ததையும் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து கடலூர் முதுநகர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்களில் ஒருவர் கடலூர் சங்கிலிக்குப்பம் சாமிநகரைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் சின்னதுரை(28) என்பது தெரிய வந்தது. கூலித்தொழிலாளியான இவர் முதுநகரில் கடைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதோடு, அவ்வழியாகச் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீதும் அந்த வாகனம் மோதியுள்ளது. இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 பேர் இறந்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்கள் குறித்த மற்ற விபரங்கள் தெரிய வரவில்லை.
போலீஸார் விபத்தில் இறந்த மற்ற 2 பேர் குறித்தும் மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...