நெல்லையில் சாலை விபத்து: பொறியியல் மாணவி சாவு
திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் பொறியியல் பயின்று வந்த மாணவி பூ. சூர்யா (17) இறந்தார்.


திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் பொறியியல் பயின்று வந்த மாணவி பூ. சூர்யா (17) இறந்தார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் மகள் சூர்யா (17). இவர் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் பாடப்பிரிவில் முதலாண்டு படித்து வந்தார்.
சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மாணவி சூர்யா திங்கள்கிழமை அதிகாலையில் தனது தோழிகளுடன் திருநெல்வேலி வந்தார். புதிய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி விடுதிக்கு ஆட்டோவில் சென்றனராம்.
விடுதி முன்பு இறங்கிய சூர்யா உள்ளிட்ட மாணவிகள் சாலை கடக்க முயன்றனராம். அப்போது திருநெல்வேலி நோக்கி வந்த கார் சூர்யா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...