சிதம்பரம் நடராஜர் கோயிலில் பழங்கால புராதான ஓவியங்கள் மீண்டும் வரையப்பட்டு சித்சபை பின்புறம் உள்ள மண்டபத்தில் பொருத்தப்படவுள்ளன.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திற்கு வீற்றிருக்கும் சித்சபையின் பின்புறம் உள்ள மண்டபத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிதம்பரம் சரித்தரம் சொல்லும் 16 ஓவியங்கள் உள்ளன. மூலிகை பெயிண்டால் வரையப்பட்ட பழங்கால ஓவியங்கள் தற்போது பழுதடைந்துள்ளது.
இதனை முன்னிட்டு கோயில் பொதுதீட்சிதர்கள் ஏற்பாட்டின் பேரில் உலக புகழ்பெற்ற புராதான ஓவியர் சில்பியின் சிஷ்யரான இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மவாசன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 11 மாதங்கள் முகாமிட்டு ரூ.10 லட்சம் செலவில் கேரள மூலிகை பெயிண்டால் சிங்கப்பூர் ரெஸ்கின் கேன்வேஸ் துணியில் அந்த 16 புராதான ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளார். இந்த ஓவியங்கள் தீப்பிடிக்காத பலகையில் வைத்து பிரேம் செய்யப்பட்டு சித்சபை மண்டபத்தில் ஏற்கனவே இருந்த ஓவியங்களுக்கு மேலே விரைவில் பொருத்தப்படவுள்ளது. தற்போது அந்த ஓவியங்கள் கொலு மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என ரா.பாஸ்கர தீட்சிதர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஓவியர் பத்மவாசன் தெரிவித்தது: பொதுதீட்சிதர்களின் கோரிக்கையை ஏற்று கோயிலுக்கு அர்ப்பணிப்பாக இந்த ஓவியங்களை எந்தவித ஊதியமின்றி வரைந்து கொடுத்துள்ளேன். ஏற்கனவே நான் கார்கில் போர், சுனாமி பேரலை குறித்த ஒவியங்களை வரைந்துள்ளேன் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


