குடிநீர் கேட்டு விருதுநகரில் திடீர் சாலை மறியல்
விருதுநகரில் குடிநீர் நான்கு மாதங்களாக கிடைக்காததால் பொதுமக்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


விருதுநகரில் குடிநீர் நான்கு மாதங்களாக கிடைக்காததால் பொதுமக்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விருதுநகர், பாலம்மாள் நகரில் கடந்த 4 மாதங்களாக தண்ணீர் குழாய் உடைந்து பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர். நகராட்சி நிர்வாகம் இதனைச் செப்பனிட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனையடுத்து விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு குழாயிலிருந்து சைக்கிளில் வந்து குடிநீர் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அக் குழாயை அடைத்துவிட்டதாம். இதனால் இப் பகுதி மக்கள் சுமார் 2 கி.மீ. தூரமுள்ள ஆனைக்குழாய் என்ற இடம் போய் சைக்கிளில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது.குடிநீர் குறித்து புகார் கூற நகராட்சி அலுவலகம் சென்றால், அவர்கள் குறிப்பிட்ட பகுதி கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்டது. அங்கு போய் கேளுங்கள் என்று பொதுமக்கள் அலைக்கழித்துள்ளார்கள். ஊராட்சியில் போய் கேட்டால் நகராட்சியில் போய் கேளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
இதனால் ஆத்திரமுற்ற அப் பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையம் எதிரே, சாத்தூர் சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், போலீஸார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை நகராட்சி அலுவலகம் அழைத்துச் சென்றனர்.
பாலம்மாள் நகருக்கு விரையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் அளித்த உறுதிமொழியை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. திடீர் சாலை மறியலால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...