தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மதுராந்தகம் அருகே தவறான சிகிச்சையால் பெண் பலி: போலி மருத்துவர் கைது

மதுராந்தகம் அருகே தவறான சிகிச்சையால் பெண் பலி: போலி மருத்துவர் கைதுமதுராந்தகம் அடுத்த கருப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்து

Updated On :27 அக்டோபர் 2015, 11:58 am

மதுராந்தகம் அடுத்த கருப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்து இறந்து போன நிலையில், அவருக்கு சிகிச்சையை அளித்தவர் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

செய்யூர் வட்டம், கருப்பூரை கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை (வயது 41). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். திங்கட்கிழமை காலை பவுஞ்சூர் பகுதியில் ஓம்சக்தி கிளினிக் நடத்தி வந்த மருத்துவர் விஜயகுமாரிடம் சிகிச்சைக்காக ராமதாஸ் தனது மனைவி அஞ்சலையை காட்டினார். அப்போது மருத்துவர் சிகிச்சையை அளித்து உடனே அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையை அளியுங்கள் என கூறினார். அதன்பின்பு திங்கட்கிழமை மாலை செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அஞ்சலி வந்தார். அங்கு வந்த சில நிமிடங்களில் அவர் இறந்து போனார்.

இறந்து போன அஞ்சலிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலியின் உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் அவர் இறந்துள்ளார் என சந்தேகப்பட்டு அணைக்கட்டு காவல் நிலையத்தில் அஞ்சலியின் கணவர் ராமதாஸ் புகார் செய்யப்பட்டார். புகாரை பெற்றுக் கொண்ட செய்யூர் காவல் துறை ஆய்வாளர் அமல்ராஜ் இதுப்பற்றி நேரில் விசாரணை செய்தார். அஞ்சலிக்கு சிகிச்சையை அளித்த மருத்துவர் விஜயகுமார் நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர். அவர் உரிய மருத்துவ  கல்வியை பயிலாமல், ஹோமியோபதி படிப்பை வைத்து பவுஞ்சூர் சுற்றியுள்ள மக்களுக்கு ஒம்சக்தி கிளினிக் என்ற பெயரில் சிகிச்சையை அளித்துள்ளார் என காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. செய்யூர் காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போலி மருத்துவர் விஜயகுமாரை கைது செய்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறைக்கு அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.