மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

அன்னவாசல் அருகே சாலைவிபத்து வாலிபர் சாவு

அன்னவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

News image
Updated On :28 அக்டோபர் 2015, 2:41 pm

சி. உதயகுமார்

அன்னவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

அன்னவாசல் அருகேயுள்ள சத்தியமங்கலத்தச் சேர்ந்தவர் தங்கையா மகன் பாண்டியன்(35), விவசாயி இவர் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சத்தியமங்கலம் - புதுகை சாலையில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்று திரும்புகையில், திருச்சியிலிருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதியதில், தலையில் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வெள்ளனூர் போலிஸார் வழக்கு பதிந்து கார் ஓட்டுநர் பரமகுடியைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ராஜா அப்துல்லாவை(23) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.