மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

இடப்பிரச்சனை: தந்தை வீட்டுக்கு தீ வைத்த மகன் கைது

இலுப்பூர் அருகே இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதத்தில் தந்தை வீட்டுக்கு தீ வைத்த மகன் உள்பட இருவரை இலுப்பூர் போலிஸார் கைது செய்தனர்

News image
Updated On :28 அக்டோபர் 2015, 2:39 pm

சி. உதயகுமார்

இலுப்பூர் அருகே இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதத்தில் தந்தை வீட்டுக்கு தீ வைத்த மகன் உள்பட இருவரை இலுப்பூர் போலிஸார் கைது செய்தனர்.

இலுப்பூர் அருகேயுள்ள முருககோன்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை (75) விவசாயி, இவரது மகன் பி. செல்வம் (35) இவருக்கு சேர வேண்டிய பங்கு இடத்தை பிச்சை தரமறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக ஆத்திலிருந்த செல்வமும், பிச்சையின் அண்ணன் மகன் சி. மூக்கனும் சேர்ந்து கடந்த அக், 26-ம் தேதி பிச்சைக்கு சொந்தமான வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.  இதில் வீட்டில் இருந்து 16 வளர்ப்பு ஆடுகள், 2 இருசக்கர வாகனம் உள்ளிட்வைகள் தீயில் எரிந்து நாசமாயின.   

இதுகுறித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் பிச்சை அளித்த புகாரினை தொடர்ந்து வழக்கு பதிந்த போலீஸார் செல்வம், மூக்கன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.