ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நெல்லையில் மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டம்:438 பேர் கைது

பாளையங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்துக்கு முயன்ற மின்வாரிய தொழிலாளர்கள் 438 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :28 அக்டோபர் 2015, 9:03 am

முத்துகுமார்

பாளையங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்துக்கு முயன்ற மின்வாரிய தொழிலாளர்கள் 438 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு தினக்கூலியாக ரூ.250 மற்றும் நிகழாண்டுக்கான போனஸ், கருணைத் தொகை வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு மின்வாரியப் பணிகளை முடித்துவிட்டு அதன்பின்பு ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்று அறிக்கை அளிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.), தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு பல்வேறு சங்கத்தினரும் திரண்டனர். போராட்டத்துக்கு எஸ்.பூலுடையார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாநில துணைப் பொதுச்செயலர் ஆர்.கருமலையான் தொடக்கவுரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகாராஜநகர்-சிவந்திப்பட்டி சாலையில் மறியலுக்கு முயன்றதாக 438 பேரை, அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த காவல் உதவி ஆணையர் கந்தசாமி தலைமையிலான போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.