ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் நஷ்டஈடு: கடலூர் நீதிமன்றம்

விபத்தில் பலியான சாப்ட்வேர் என்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் நஷ்டஈடு வழங்கிட கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2015, 12:38 pm

முத்துகுமார்

விபத்தில் பலியான சாப்ட்வேர் என்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் நஷ்டஈடு வழங்கிட கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவையைச் சேர்ந்தவர் தனஞ்செயன்(40). அதே பகுதியில் தனியாக கணினி மென்பொருள் நிறுவனம் நடத்தி அதன் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி தனது காரில் கோவை-சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகேச் சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் பலத்த காயமுற்றார். கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சை பெற்று வந்த போதிலும் பலனின்றி உயிரிழந்தார்.

எனவே, இழப்பீட்டுத்தொகை கோரி அவரது மனைவி துர்க்காதேவி மற்றும் வாரிசுதாரர்கள் கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.தனபால் தீர்ப்பளித்தார். அதில், தனஞ்செயன் குடும்பத்தாருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.98 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 8 சதம் வட்டியுடன் இத்தொகையை வழங்கவும் தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து வழக்குரைஞர் எம்.சிவமணி கூறுகையில், உயிரிழந்த தனஞ்செயன் மாதம் ரூ.15 லட்சம் வரையில் வருமானம் ஈட்டி வந்தார். எனவே, அவரது தொழில், வயது ஆகியவற்றை கணக்கீட்டு ரூ.1.50 கோடி இழப்பீட்டுத் தொகை கோரியிருந்தோம். அதனடிப்படையில் தற்போது ரூ.98லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.