யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விருதுநகரில் போனஸ் கேட்டு மறியல்: மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 162 பேர் கைது

விருதுநகரில் போனஸ் கேட்டு மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :28 அக்டோபர் 2015, 11:55 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகரில் போனஸ் கேட்டு மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலர் சந்திரன், செயல் தலைவர் தங்கராஜ், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின்வாரிய அனல், புனல், பொது கட்டுமான வட்டம், விநியோக வட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். நிரந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதைப்போல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ், கருணைத் தொகை 30 சதவிகிதமும் வழங்க வேண்டுமென வலியுறத்தி கோஷமிட்டனர்.

இதில், மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 162 பேரை விருதுநகர் கிழக்கு போலீசார் கைதுசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.