யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி விஷம் தின்று தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், வீட்டின் அருகே உள்ள பாதை பிரச்சினை தொடர்பாக விஷம் தின்று விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2015, 11:53 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், வீட்டின் அருகே உள்ள பாதை பிரச்சினை தொடர்பாக விஷம் தின்று விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சந்திவீரன் (52). இவருக்கும் அருகில் குடியிருக்கும் அடைக்கலம் என்பவருக்கும் பாதை பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அடைக்கலம் புகார் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திலும் சந்திவீரன் மீது அடைக்கலம் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் விசாரணைக்காக போலீசார் அழைத்துள்ளனர். ஆனால், காவல் நிலையம் செல்லாமல், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சந்திவீரன் வந்து, திடீரென தான் வைத்திருந்த குருணை மருந்தை எடுத்து வாயில்போட்டுள்ளார். இதைப் பார்த்த அருகிலிருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஒருவர் விஷ மருந்து சாப்பிட்ட சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.