புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு நூலகங்களுக்கு தினமணி சார்பில் வெளிடப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் சிறப்பு மலர் புத்தகங்களை தினமணியின் தீவிர வாசகரும், புதுகை அரசு மன்னர் கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியருமான சா. விஸ்வநாதன் நன்கொடையாக நூலக அலுவலரிடம் வழங்கினார்.
சாமானிய குடும்பத்தில் பிறந்த ஒருவராலும் செயற்கரிய சாதனைகளைச் செய்து காட்ட முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திவரும், மகாத்மா காந்திக்கு பிறகு இந்தியத்துணைக் கண்டத்தில் இனம், மொழி, மதம், சாதி வேறுபாடுகள், உயந்தவர்- தாழ்ந்தவர், பணக்காரர்- ஏழை, படித்தவர்- பாமரர் போன்ற அத்தனை வேறுபாடுகளையும் கடந்து எந்த ஒரு பிரிவினராலும் கருத்து மாறுபாடின்றி நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மாமனிதராக வாழ்ந்த அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில் அவரைப்பற்றிய பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகமாக வெளிவந்துள்ள சிறப்பு மலரை மாவட்டம் முழுதும் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்துத்தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க தன்னால் முடிந்ததை வாசகர் என்ற முறையில் செய்துள்ளதாக தெரிவித்தார் முன்னாள் பேராசிரியர் சா. விஸ்வநாதன்.
புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலகர் ஆர். செல்லாள் வழிகாட்டுதலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதுநிலை நூலகர் பா. முத்துவிடம் மாவட்டம் முழுதும் உள்ள 91 நூலகங்களுக்குமான தினமணி- அப்துல்கலாம் சிறப்பு மலர் புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

