இந்நிலையில், நகராட்சி ஆணையர்(பொ) ஜெ. சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், புதுகையில் மேல ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, பிருந்தாவனம் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளில் உள்பட சுமார் 35 -க்கும் மேற்பட்ட கடைகளில் நகர் நல அலுவலர் பா. கலைவாணி தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 3 டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்ததற்காக தலா ரூ. 1000 -ம் அபராதமும், மேலும் 12 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்தனர்.மேலும், விதி மீறல்களுக்காக ரூ, 5,500 அபராதமும் விதிக்கப்பட்டது.