யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடத்திய கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2015, 2:39 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி 12.9.15 ஆம் தேதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 37 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

இதில் கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றோர்:

சிவகாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ச.மணிகண்டன், க.மல்லிகா, அருப்புக்கோட்டை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ச.சுதா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பள்ளி அளவில்:

சாத்தூர், படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் க.ராகேஷ், பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச.அபிநயா, சிவகாசி அண்ணாமலை உண்ணாமலையம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் க.சரவணக்குமார் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பரிசளிப்பு விழா விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆர்.தாரணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி என்.ராஜலட்சுமி, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி கே.சிங்கராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதன்மை சார்பு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளருமான நீதிபதி எஸ்.பத்மநாபன் வரவேற்றார்.

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், 2 ஆயிரம், ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.தாரணி சிறப்புரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.