லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பூரண மதுவிலக்கு கோரி த.மா.கா சார்பில் கையெழுத்து பெறும் இயக்க நிகழ்ச்சி

பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் அருகே  திருச்சுழியில் த.மா.கா சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று தொடங்கி நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2015, 2:43 pm

பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் அருகே  திருச்சுழியில் த.மா.கா சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு த.மா.காவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முன்னாள் மக்களவை உறுப்பினர் உடையப்பன் முன்னிலை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஊர்வலமாக சென்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெற்றனர்.

இதேபோல், திருச்சுழி அம்பேத்கார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணிச்செயலாளர் உலக்குடி செல்வம், சிவகாசி எம்.கே.ராஜன், தெற்குமாவட்ட மகளிர் அணி தலைவர் வசந்தி மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தலைவர்கள் சங்கர்போஸ், துரைப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.