விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மகாத்மா பள்ளியில் ரோட்டரி ஏர்லி ஆக்ட் சங்க தொடக்க விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ரோட்டரி ஏர்லி ஆக்ட் சங்கத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2015, 2:19 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ரோட்டரி ஏர்லி ஆக்ட் சங்கத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திராநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

மூத்த உறுப்பினர் வழக்குரைஞர் ராமர், வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாக அதிகாரி என்.ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் முதல்வர் எம்.ராணி முருகேசன் வரவேற்றார். ரோட்டரி ஏர்லி ஆக்ட் தலைவராக லக்ஷ்மிகாந்த், செயலாளராக லாரா ஹரிஹரசுதன் ஆகியோரும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

மாணவப் பருவத்திலேயே சமூக சேவை செய்யும் மனப்பான்மை வளர வேண்டும் என்பதற்காகவும், சமுதாயத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதற்கும் இந்த சங்கப் பணிகள் மாணவர்களுக்குப் பயன் தரும் என்று பள்ளியின் தாளாளர் ஜி.முருகேசன் கூறினார்.

நிகழ்ச்சியில் மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளி முன்னாள் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற தலைவர் லக்ஷ்மிகாந்த் ஏற்புரையாற்றி, நலத்திட்டங்களை அறிவித்தார். செயலாளர் லாரா ஹரிஹரசுதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.