விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருகிற 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் கிராமங்களில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தலைநகரத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காகவும், மனு அளிக்கவும் வந்து சிரமப்பட்டுகின்றனர். இதுபோன்றவைகளை தடுக்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்து அம்மா திட்ட முகாம் என்ற பொதுமக்களை தேடி வருவாய்த்திட்டம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்து நலத்திட்ட உதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
எனவே மேற்குறிப்பிட்ட நாளில் வட்டார அளவில் நடைபெற இருக்கிற கிராமங்களின் விவரம். ஸ்ரீவில்லிபுத்தூர்-கான்சாபுரம், சிவகாசி-கோட்டைப்பட்டி, சாத்தூர்-ஊமத்தம்பட்டி, விருதுநகர்-துலுக்கப்பட்டி, அருப்புக்கோட்டை-பொம்மகோட்டை, காரியாபட்டி-அயன்ரெட்டியாபட்டி, திருச்சுழி-நடுவப்பச்சேரியிலும் அம்மா திட்ட முகாம் நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது

தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

