லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விவசாயிகள் குழுக்களுக்கு பருப்பு உடைக்கும் மில் செயல் விளக்க ஏற்பாடு

வேளாண் பொறியியல் துறை சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் குழுக்களுக்கு பருப்பு உடைக்கும் மில் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :10 செப்டம்பர் 2015, 3:11 pm

வேளாண் பொறியியல் துறை சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் குழுக்களுக்கு பருப்பு உடைக்கும் மில் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணன்கோவில் வேளாண் பொறியியல் துறை அலுவலக வளாகத்தில்  காரியாபட்டி சிறுதானிய விவசாய உற்பத்தியாளர் கம்பெனி மூலம் விவசாயிகள் குழுக்களுக்கு பருப்பு உடைக்கும் மில் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் துணை இயக்குநர் முத்துமுனியாண்டி முன்னிலை வகித்தார்.

இதில், கிராமப்புற பகுதி விவசாயிகள் குழுக்களுக்கு பயிர் தொழிலுடன், கூடுதல் தொழிலாக பருப்பு உடைக்கும் ஆலை தொழில் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த ஆலை மூலம் மிகவும் பயனுள்ள முறையில் எளிதாகவும், அதிக செலவில்லாமலும் எளிய முறையில் பருப்புகளை உடைக்க முடியும். மேலும், இந்த ஆலையின் செயல்பாடுகள் குறித்து வேளாண் துறை செயற்பொறியாளரிடம் விவசாயிகள் விளக்கமாக கேட்டறிந்தனர். அதோடு, செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி வருவாய் கோட்ட வேளாண் அலுவலர் பா.ரவி உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.