லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

உலக சிக்கன நாள் விழா: மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு

பள்ளி கல்வித்துறை மற்றும் சிறுசேமிப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உலக சிக்கன நாள் விழா கடைபிடிக்கப்பட்டு வருவதால், அன்றைய நாளில் சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

Updated On :12 செப்டம்பர் 2015, 12:11 pm

பள்ளி கல்வித்துறை மற்றும் சிறுசேமிப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உலக சிக்கன நாள் விழா கடைபிடிக்கப்பட்டு வருவதால், அன்றைய நாளில் சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இன்று கூறுகையில், உலக சிக்கனநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அக்.30-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு பண்புகளை வளர்க்கும் வகையில் கட்டுரைப்போட்டி, நாடகம், நடனம், பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் 3 பேருக்கு உலக சிக்கன நாள் விழா அன்று ஆட்சியரால் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியவை சிறுசேமிப்புத்துறை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நிகழாண்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்க செய்வதற்கு தலைமையாசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போட்டி, வருகிற அக். முதல் வார இறுதியில் கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் அளவில் நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் குழுவினர் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.