எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எடை குறைவான ஹெல்மெட்: ஆலோசனை வழங்கி பாராட்டு பெற்ற ஆசிரியை

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் பங்கேற்ற கலாம் பாசறை சந்திப்பு நிகழ்ச்சியில், எடை குறைவான ஹெல்மெட்

News image
Updated On :12 செப்டம்பர் 2015, 10:19 am

செல்வ முத்துகுமாரசாமி

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் பங்கேற்ற கலாம் பாசறை சந்திப்பு நிகழ்ச்சியில், எடை குறைவான ஹெல்மெட் தயாரிக்கவேண்டுமென்ற கோரிக்கையை காரைக்கால் பள்ளி விரிவுரையாளர் முன்வைத்து பாராட்டு பெற்றார்.

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் நல்லோர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாம் பாசறை சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில் பங்கேற்று, பாராட்டு பெறும் வகையிலான கருத்தை வெளியிட்ட காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியல் விரிவுரையாளர் எஸ்.சித்ரா, 4 கிலோ எடையிலிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை காலை 400 கிராம் எடையில் தயாரித்ததாக கலாம் கூறியிருந்தார். அதுபோல, கார்பன் கூட்டுப் பொருளைக் கொண்டு ஹெல்மெட் தயாரிக்க முடியுமா, முடியும் என்றால் தயங்காமல் தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆலோசனை கூறியிருந்தேன்.

இதனை மிகச்சிறந்த ஆலோசனை என்ற கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், தயாரிக்க முடியும் என்ற பதிலைத் தந்தார். அரங்கத்தில் இருந்தோரும் இந்த ஆலோசனைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.