விராலிமலை அருகே அனுமதியின்றி மதுவிற்ற ஒருவர் கைது
விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.


விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள தாளப்பட்டி பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதிகளில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தாளப்பட்டி பெட்டிக்கடையில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த ஆறுமுகம் மகன் வடிவேலை(33) கைது செய்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...