விராலிமலையில் காசு வைத்து சூதாடிய 6 பேர் கைது: ரொக்கம் ரூ.10 ஆயிரம் பறிமுதல்
விராலிமலையில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சனிக்கிழமை 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.


விராலிமலையில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சனிக்கிழமை 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள அருண் கார்டன் பகுதியில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக விராலிமலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அ. மா. செந்தில்மாறன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த விராலிமலை கிருஷ்ணமூர்த்தி(30) முத்துபாண்டி(30), மாணிக்கவேலு(40), கிருஷ்ணன்(45), தர்மராஜ்(51), மணிமுத்து(37) ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரு. 10 ஆயிரத்து 580 பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...