போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த நால்வர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாப் பேசி கொலை மிரட்டல் விடுத்த நால்வரை போலீஸார் கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாப் பேசி கொலை மிரட்டல் விடுத்த நால்வரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி நாடார் உறவின்முறைக்குச் சொந்தமான கலையரங்கம் முன்பு ஆடல் பாடல் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் விமல்ராஜ் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கணேசன் மகன்கள் தீபக், அசோக், குருவையா மகன் காளைச்சாமி, மாரிக்கனி மகன் கார்த்திக்ராஜா ஆகியோர் அருவருப்பான பாடல்களைப் போட்டு ஆடுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். இதனை காவலர் விமல்ராஜ் கண்டித்துள்ளார். ஆத்திரமுற்ற நால்வரும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசாமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
இது குறித்து விமல்ராஜ், நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சார்பு ஆய்வாளர் வீரணன் வழக்குப் பதிவு செய்து தீபக், அசோக், காளைச்சாமி, கார்த்திக்ராஜா ஆகிய நால்வரையும் கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...