இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

பாமகவின் வரைவு தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமகவின் வரைவுத் தேர்தல் அறிக்கை புதன்கிழமை (செப்.16) வெளியிடப்படும் என்று

Published On :

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமகவின் வரைவுத் தேர்தல் அறிக்கை புதன்கிழமை (செப்.16) வெளியிடப்படும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
 இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமகவின் வரைவுத் தேர்தல் அறிக்கை சென்னையில் செப்டம்பர் 16-ஆம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும்.
 தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் அனைத்துப் பிரச்னைகளுக்குமான தீர்வு அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.
 கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்கட்டமைப்பு, மின்தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் எனப் பல்வேறு துறைகளில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மதுவை ஒழிக்க வேண்டிய பெரும் கடமையும் அரசுக்கு உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில்தான் பாமகவின் வரைவு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 இந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு பொதுமக்களிடமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களிடமும் கருத்துகள் கோரப்படும். அவர்கள் தெரிவிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளும் சேர்க்கப்பட்டு இறுதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.