
மலைப் பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முடியாததற்கான காரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திங்கள்கிழமை விளக்கம் அளித்தார்.
வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் தில்லிபாபு பேசியபோது, மலைப் பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரி 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருவதாகக் கூறினார்.
அப்போது அமைச்சர் உதயகுமார் குறுக்கிட்டுக் கூறியதாவது:
மலையைத் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதைப் போல, மலையில் வாழ்வோரின் உயிரையும் காக்க வேண்டியுள்ளது. இதனால், அங்கு உள்ள நன்மை, தீமைகளைக் கருத்தில்கொண்டு பட்டா வழங்குவதற்கு தடையாணை உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





