தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

மேட்டூர் அணையில் வெளியே தெரியும் கிறிஸ்தவ ஆலய கோபுரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாகக் குறைந்ததையடுத்து, பண்ணவாடி பரிசல்துறையில் தண்ணீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலயத்தின்

Published On :

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாகக் குறைந்ததையடுத்து, பண்ணவாடி பரிசல்துறையில் தண்ணீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் திங்கள்கிழமை வெளியே தெரிந்தது.
 காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 2,807 கனஅடியாக இருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை 2,436 கன அடியாகக் குறைந்தது.
 காவிரி டெல்டா பாசனத்துக்கும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு 15,700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீரவரத்தைக் காட்டிலும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து திங்கள்கிழமை காலை 78.02 அடியானது. இதையடுத்து, மேட்டூர் அணை பகுதியான பண்ணவாடி பரிசல்துறையில் தண்ணீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. நீர்மட்டம் மேலும் குறையும் போது, அணை தண்ணீரில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், கீரைக்காரனூர் சோழப்பாடி வீரபத்திரன் கோயில், மீனாட்சியம்மன் கோயில் ஆகியவையும் வெளியே தெரியும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.