தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!
/

ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து திருச்சி வழியாக வரும் ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Updated On :

சென்னையில் இருந்து திருச்சி வழியாக வரும் ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

திருச்சி வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நேற்றிரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு மாத்தூர்–செந்துறை இடையே வந்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை என்ஜின் டிரைவர் கண்டுபிடித்தார். இதையடுத்து ரயிலை உடனடியாக நிறுத்தி இது குறித்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளங்களை இணைக்கும் பகுதியில் உள்ள வெல்டிங் விரிசல் அடைந்து தண்டவாளம் விலகியிருந்தது தெரிய வந்தது. உடனே அவற்றை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ரயில் நீண்ட நேரம் நடுவழியில் நிற்பதை பார்த்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்த பயணிகள் விரிசல் குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து திருச்சிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும் மாத்தூர் அருகே வந்ததும் நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளம் சரி செய்யும் பணி முடிந்ததும் 5.30 மணிக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.