
வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தென் மேற்குப் பருவ மழை கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: இந்த நிலையில், மேற்கு மத்திய வங்கக் கடலில், வட மேற்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது.
இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்னும் வலுவடையவில்லை. இருப்பினும், ஓரிரு நாள்களில் வலுவடையும் என எதிர்பார்க்கிறோம்.
வலுவடைந்த பின்னரே, எந்தத் திசை நோக்கி நகர்கிறது என்பதைப் பொருத்து, தமிழகத்தில் மழை பெய்யுமா என்பதைக் கூற முடியும். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது தொடக்க நிலையில் உள்ளதால் புயலாக மாறுமா என்பதையும் உறுதிப்படுத்த முடியாது.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியாக இருக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






