ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

இலவசப் பட்டா, ஓய்வூதியம் விவகாரம்: அதிமுக - திமுக விவாதம்

இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் யார் ஆட்சியில் அதிகம் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக அதிமுக- திமுக உறுப்பினர்கள் இடையே

Updated On :

இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் யார் ஆட்சியில் அதிகம் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக அதிமுக- திமுக உறுப்பினர்கள் இடையே சட்டப் பேரவையில் திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றது.
 வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசியதாவது:
 ஓர் இடத்தில் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்தால், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கலாம் என்பதைப் படிப்படியாகக் குறைத்து, 3 ஆண்டுகள் இருந்தாலே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கலாம் என்று திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக, கடந்த திமுக ஆட்சியில் 12 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன என்றார்.
 அப்போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறுக்கிட்டுக் கூறியதாவது:
 திமுக ஆட்சியில் 12 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறுவது உண்மை அல்ல. இலவச வீட்டுமனைப் பட்டா பெறுவதற்கு பல்வேறு வரையறைகள் உள்ளன. அந்த வரையறைகளுக்கு ஏற்பத்தான் வழங்கப்படுகிறது.
 அதிமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் 8.52 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு 3 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது 1.5 லட்சம் பேர் வரை கொடுத்துள்ளோம் என்றார்.
 அதைத் தொடர்ந்து கோவி.செழியின் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு விண்ணப்பித்து கிடைக்காதது தொடர்பாகப் பேசினார். அதற்கு அமைச்சர் உதயகுமார் குறுக்கிட்டு, வரையறைகளின் அடிப்படையில் தகுதி உடையவர்களுக்குக் கொடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
 பின்னர், கோவி.செழியின் முதியோர் உதவித் திட்டம் தொடர்பாக பேசத் தொடங்கினார். அப்போது அமைச்சர் உதயகுமார் குறுக்கிட்டுப் பேசினார்.
 உடனே சட்டப் பேரவை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, உறுப்பினர் ஒருவர் பேசும்போது அமைச்சர் வரிக்கு வரி குறுக்கிட்டுப் பேசுவது முறையல்ல. பேரவைத் தலைவர் இதைத் தடுக்க வேண்டும் என்று கூறினார்.
 துரைமுருகனுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்களும் எழுந்து குரல் கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். இதனால் பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
 அப்போது அமைச்சர் பா.வளர்மதி எழுந்து கூறியதாவது:
 அமைச்சர்கள் பதிலுரை அளிக்கும்போது திமுக உறுப்பினர்கள் இருப்பது இல்லை. இதனால்தான், உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் உடனே பதில் அளிக்கிறார். இதில் என்ன தவறு? திமுக உறுப்பினர்கள் பதிலுரையின்போது இருக்காதது ஏன் என்றார்.
 துரைமுருகன்: கடந்த முறை நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே நாங்கள் செய்கிறோம்.
 ஆர்.பி.உதயகுமார்: திமுக உறுப்பினர் உண்மைக்கு மாறான தகவலை அவையில் பதிவு செய்ய முற்படுகிறார். இதை அனுமதிக்க மாட்டோம். உண்மையைக் கூறினால், அதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
 பின்னர், கோவி.செழியின் முதியோர் ஓய்வூதியத் திட்டம் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 அதற்கு அமைச்சர் உதயகுமார், ஓய்வூதியத் திட்டம் எங்கும் நிறுத்தப்படவில்லை. தகுதி உடையவர்களுக்கு முறையாக அளிக்கப்பட்டுள்ளது. 36.56 லட்சம் பயனாளிகள் இந்தத் திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். திமுக ஆட்சியைவிட, இது அதிகம் என்றார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.